கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரணை நடைபெறும் – காவல்துறை .!

  • நவீத் பாபா, ரபி அகமது ஆகிய இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை டி.எஸ்.பி தேவீந்தர் சிங் தப்பிக்க உதவி செய்தார்.
  • டி.எஸ்.பி தேவீந்தர் சிங்  கைது செய்யப்பட்டு காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு போலீசார் என அனைவரும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அதே நேரத்தில் ராணுவம் வீரர்கள் மற்றும் போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர்.அப்போது சந்தேகப்படும் படியான 2 நபர்களை பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

நவீத் பாபா, ரபி அகமது ஆகிய இரண்டு பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் எனவும் அவர்களை ஸ்ரீநகர் போலீஸ் டி.எஸ்.பி தேவீந்தர் சிங் சோபியான் மாவட்டத்திலிருந்து தப்பி  செல்ல காரில் அழைத்துச் சென்றார் என தெரியவந்தது.

இதை தொடர்ந்து டி.எஸ்.பி தேவீந்தர் சிங்  கைது செய்யப்பட்டார். அவரிடம் காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.பயங்கரவாதிகளுக்கு உதவி செய்யப்பட்ட தேவீந்தர் சிங் பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரிக்கப்படுவார் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மேலும் காஷ்மீர் மாநிலத்தில்  விமான நிலைய பாதுகாப்பு பணியில் தேவீந்தர் சிங் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan