#Breaking: “ஆல் பாஸ் என அரசு அறிவித்ததை ஏற்க இயலாது”- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அரியர் தேர்வு ரத்து செய்து “ஆல் பாஸ்” என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. தற்பொழுது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் அனைத்து பட்டப் படிப்புக்களுக்கு இறுதிப் பருவத்தேர்வு தவிர, மற்ற பருவ தேர்வுகள் ரத்து செய்வதாகவும், அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு பல தரப்பில் ஆஹாராவும், சில தரப்பில் எதிர்ப்புகளும் கிளம்பியது.

இதனை எதிர்த்து கடந்த அக்டோபர் மாதம் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்பட 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அரியர் தேர்வு ரத்து செய்து “ஆல் பாஸ்” என அறிவித்து, பிறப்பித்த அரசின் உத்தரவை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு தேர்வு நடத்த தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், கல்வி புனிதத்தில் சமரசம் செய்து கொள்ளாமல், தேர்வு நடத்துவதில் யூ.ஜி.சி., தமிழக அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

Recent Posts

தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்.? தேர்தல் ஆணையம் கூறுவதென்ன.?

Manickam Tagore : காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற புகார் மீது ஒருவாரத்தில் நடவடிக்கை. - தேர்தல் ஆணையம். கடந்த வாரம்…

23 mins ago

பிரதமர் மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

Election2024: தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இரண்டாம் கட்டமாக நாளை…

37 mins ago

ராஜஸ்தானில் இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் நொறுங்கி விபத்து.!

Air Force Plane Crash:  ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் (யுஏவி) இன்று காலை கீழே…

50 mins ago

வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க…ஓகே சொல்லிய விஜய்?

Ghilli Re Release: தளபதி விஜய்யிடம் கில்லி திரைப்பட விநியோகஸ்தர் வைத்த கோரிக்கையை ஏற்றதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக நடிக்கும்…

1 hour ago

நேற்று RBI தடை…. இன்று பங்குகள் சரிவு… கோடாக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய நிலவரம்… 

Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…

2 hours ago

தொடர்ந்து சிறிதளவு சரியும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று  குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…

3 hours ago