Covid -19 உலகளவில் குறைந்துள்ளதா கொரோனா பாதிப்பு? வாருங்கள் பாப்போம்!

Covid -19 உலகளவில் குறைந்துள்ளதா கொரோனா பாதிப்பு? வாருங்கள் பாப்போம்!

உலகளவில் கொரோனா பாதிப்பு முந்தைய தினங்களை ஒப்பிடுகையில் குறைந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும்.

உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் எனும் உயிர்கொல்லி கடந்த சில மாதங்களாக மிகவும் பாடாய் படுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகளவில் 13,028,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 571,080 பேர் உயிரிழந்துள்ளனர், 75,75,523 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 194,677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல 3,956 பேர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். ஆனால், இதற்கு முந்தைய நாட்களை கணக்கெடுக்கையில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 2 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் கணக்கிடப்பட்டது. ஆனால், கடந்த ஒரு வாரத்தை கணக்கிடுகையில் இன்று 6 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்று தான் சொல்லியாக வேண்டும்.

தற்பொழுது மருத்துவமனைகளில் 48,81,579 பேர்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். முழுவதுமாக இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை ஒழிக்க நாம் வீட்டிலேயே தனித்திருப்போம், விழித்திருப்போம், நாட்டு பிரதமரின் அறிவுரைப்படி முக கவசங்கள் அணிதல் மற்றும் கை கழுவுவம் பழக்கத்தை வழக்கமாக்கி கொள்வோம்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube