அரியலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம்!

By

அரியலூர், பெரம்பலூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அரியலூர் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைபொது செயலாளர் வைத்தி தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் சின்னதுரை வரவேற்று பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு ரூ.50 லட்சம் தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் கண்ணன், செந்தில்குமார் மற்றும் பத்து ஒன்றியங்களை சேர்ந்த அனைத்து அணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Dinasuvadu Media @2023