37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

அரிக்கொம்பன் யானை நடமாட்டம் – கம்பத்தில் 144 தடை உத்தரவு..!

அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு அமல். 

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதிக்குள் நுழைந்த அரிக்கொம்பன் யானை அங்குள்ள மக்களை விரட்டும் மிகவும் ஆக்ரோஷமான காட்சிகள் இணையத்தில் வெளியானது. இந்த யானை தாக்கியதில் பால்ராஜ் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த யானை இதுவரை 18 பேரை கொன்றுள்ளதால், மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் கம்பம் பகுதியில் பதற்றம் நிலவுகிறது. வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து அரிக்கொம்பன் யானை முகாமிட்டுள்ள கம்பம் பகுதியில் மக்கள் வெளியில் வராமலிருக்க, உத்தமபாளையம் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பொள்ளாச்சி யானைகள் முகாமில் இருந்து 2 கும்கி யானைகளை வரவழைக்கவும் வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.