பாலிடெக்னீக் முடித்து பொறியியல் படிப்பில் சேர காத்திருப்பவரா நீங்கள்..? நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

பாலிடெக்னிக் முடித்தவர்கள் நேரடி 2ம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தகுதி வாய்ந்த பல் டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி இரண்டாமாண்டு பொறியியற் பட்டப்படிப்பிற்கு தமிழ்நாட்டிலுள்ள அரசு / அரசு உதவிபெறும் / அண்ணா பல்கலைக்கழக துறை மற்றும் உறுப்புக் கல்லூரிகள் / அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லுரிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க தேவையான நெறிமுறைகள்:

விண்ணப்பிக்கும் முறை :

www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும். சான்றிதழ்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் நாள் :

துவங்கும் நாள்: 24.06.2022 முடிவுறும் நாள்: 23.07.2022

 பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் ரூ.300/-ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking இணையதளம் வாயிலாக செலுத்தலாம். இணையதளம் வாயிலாக பதிவுக் கட்டணத்தை செலுத்த இயலாத மாணாக்கர்கள், “The Secretary, Second year B.E./B.Tech. Degree Admissions 2022-23, ACGCET, Karaikudi” payable at Karaikudi” என்ற பெயரில் 24.06.2022 அன்றிலிருந்து பெற்ற வரைவோலையை பதிவுக் கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் (TFC) வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்கலாம்.

SC/SCA/ST பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த அவசியமில்லை.  விண்ணப்பதாரர்கள் வங்கி வரைவோலையை இணையதள வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிப்பதற்கும், விண்ணப்பப் படிவத்தினை இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை (TFC) பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனைத்து TFC மையங்களிலும் போதிய அளவில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடவடிக்கைகள் 6) இந்த கல்வியாண்டில் Second Year B.E./B.Tech. பட்டப்படிப்பு கலந்தாய்வு இணையதளத்தின் வாயிலாக மட்டுமே நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிய www.tnlea.com / www.accet.co.in / www.accetedu.in ஆகிய இணையதள முகவரியில் “INFORMATION AND INSTRUCTIONS TO CANDIDATES” பக்கத்தில் பார்க்கவும். தொடர்பு எண் : 04565-230801, 04565-224528′ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

‘தல’ தோனிக்கு கே.எல்.ராகுல் மீண்டும் புகழாரம்! என்ன சொன்னாருன்னு தெரியுமா?

ஐபிஎல் 2024: தோனி களத்திற்குள் வந்தாலே எல்லாரும் மிரண்டு போயிறாங்க என்று லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் புகழாரம். நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும்…

20 mins ago

20 வருடம் கழித்து ‘கில்லி’ படத்தை ஓகோன்னு கொண்டாடும் தளபதி ரசிகர்கள்.!

Ghilli ReRelease: நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா நடித்த 'கில்லி' திரைப்படம், இன்று உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004ஆம் ஆண்டு…

35 mins ago

‘தல’ தோனியின் மாஸ் என்ட்ரி !! வார்னிங் கொடுத்த டி காக் மனைவின் ஸ்மார்ட் வாட்ச் !!

IPL 2024 : லக்னோ உடனான போட்டியில் தோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது டி காக் மனைவியின் ஸ்மார்ட் வாட்ச் எச்சரிக்கை கொடுத்துள்ளது. ஐபிஎல் தொடரின்…

38 mins ago

சென்னையில் கள்ள ஒட்டு.? மீண்டும் வாக்குப்பதிவு நடத்தணும்.! தமிழிசை புகார்.!

Election2024 : தென்சென்னையில் 13வது வாக்குசாவடியில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர் அதனால் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார். நாடாளுமன்ற முதற்கட்ட வாக்குபதிவில், தமிழகத்தில் உள்ள…

60 mins ago

மீண்டும் பறவை காய்ச்சல்.. தமிழக எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

birdsFlu : கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாடு - கேரளா எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரம் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள குட்டநாடு…

1 hour ago

தேர்தல் விதிகளை மீறினாரா நடிகர் விஜய்? சென்னை போலீசில் பறந்தது புகார்.!

Actor Vijay: தமிழக வெற்றிக் கழக்கத்தின் தலைவரும், நடிகருமான விஜய் மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் நேற்று மக்களவைத் தேர்தலுக்கான…

1 hour ago