நீங்க ஹேர் டை பயன்படுத்துபவரா….? அப்ப கண்டிப்பா இதை படிக்கணும்…!!!

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் வயது குறைந்தவர்களுக்கு கூட இன்றைய காலகட்டத்தில் ஹேர் டை உபயோகிப்பைதை அறிகிறோம். அப்படி ஹேர் டை பயன்படுத்துபவராக இருந்தால், டையை பயன்படுத்தும் போது ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், அதனை பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள். அதற்க்கு மாறாக இயற்கையான முறையில், டை பயன்படுத்தலாம்.

முடி ஏன் நரைக்கிறது…?

முடி நரைப்பதற்கான காரணம், நமது உடலில் சுரக்கும் ‘மெலனின்’ என்ற நிறமிதான் முடியின் கருமை நிறத்துக்குக் காரணம். 40 வயதுக்கு மேல், இந்த நிறமிகளை ‘டிரையோஸின்’ என்ற  என்ஸைம் தடை செய்கிறது. இதனால் முடி நரைக்கிறது. சிலருக்கு இளமையிலேயே நரைப்பதற்குக் காரணம், தவறான உணவுப்பழக்கமும் மன அழுத்தமும்  மற்றொரு காரணமாக உள்ளது என கூறுகின்றனர்.

இளம் நரைக்கான காரணம் : 

சுற்றுச்சூழல் மாசுக்களால் தலையில் படியும் தூசி, தலையில் எண்ணெயே வைக்காததால் ஏற்படும் வறட்சி போன்றவைதன இளநரைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

வழுக்கை விழுவதற்கான வாய்ப்பு :

நாம் பயன்படுத்தும் ஹேர் டையில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளது. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற தலைமுடி  சாயத்தை பயன்படுத்தும்போது கூந்தல் வறண்டு போய், முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். மேலும் இதனால் வழுக்கை விழவும் வாய்ப்புகள் அதிகம்.

வியாதிகள் :

நமது உடலில் தலை முதல் பாதம் வரை உள்ள சருமத்தில் துவாரம் இருக்கிறது.  தலையில் அடிக்கப்படும் டை சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலக்கக்கூடும். அது உள்ளே சென்றால் சுவாசத்தில் தடை, பார்வை குறைபாடு, வயிற்று வலி,  வாந்தி, பேச்சில் உளறல் போன்றவை நோயகள் ஏற்படும்.இதனால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் கூட அதிகமாக உள்ளது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment