கை குழந்தையோடு பயணம் செய்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக இந்த பதிவு..!

தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில்  குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

பொதுவாகவே பெற்றோர்கள் பயணத்தின்போது கை குழந்தைகளை அழைத்துச் செல்வது சிரமமான ஒன்று தான். தொலை தூர பயணங்கள் மேற்கொள்ளும் போது குழந்தைகளை அழைத்துச் செல்வதற்கு பதிலாக, தங்களது பயணத்தை ரத்து செய்வது சிறந்தது. ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் அப்படிப்பட்ட வேளையில்  குழந்தைகளை கொண்டுபோகும் பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.

தடுப்பூசி

குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசியை அந்தந்த மாதங்களில் சரியாக போட்டு விட வேண்டும். ஏனென்றால் எந்த ஊரில் எப்படிப்பட்ட நோய் தொற்று இருக்கும் என்பது நமக்கு தெரியாது. குழந்தைகளைப் பொறுத்தவரையில் எளிதில் அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது .தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளும் போது எப்படிப்பட்ட தொற்றுகளில் இருந்து நாம் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளலாம். தடுப்பூசி போடப்பட விட்டால் அந்த பயணத்தை ரத்து செய்வது சிறந்தது.

உணவு

குழந்தைகளைப் பொறுத்தவரையில் உணவு விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகளுக்கு 6 மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை. ஆனால் சில சமயங்களில் பெற்றோருக்கு தாய்ப்பால் பற்றாக்குறை ஏற்படும் போது, மூன்று மாதங்களிலேயே புட்டிப்பால் அல்லது மற்ற திரவப் பொருட்களை கொடுக்க தொடங்குகின்றனர்.

குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அரை திட உணவுகளை குழந்தைகளுக்கு ஏற்ற வண்ணம் தயார் செய்து வைத்துக் கொள்ளவேண்டும். வழியில் வாங்கிக் கொடுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை தூர எறிந்து விடுங்கள்.

டயப்பர்

குழந்தைகளைப் பொறுத்தவரையில் இவர்கள் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை  சிறுநீர் கழிப்பார்கள் அல்லது மலம் கழிப்பார்கள் என்பது பெற்றோர்கள் ஓரளவுக்கு அறிந்து இருப்பார்கள். அதற்கு ஏற்ற வண்ணம் டயப்பர் அல்லது மிகவும் லேசான துணிகளை எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு ப்பயன்படுத்தும் போது அவர்களது சருமத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பேருந்து

குழந்தைகளைக் கொண்டு செல்லும் போது பொதுவாக பேருந்தில் செல்வதை தவிர்த்தல் நல்லது. வாடகை கார் அல்லது டிராபிக் சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்களில் காரை பயன்படுத்துவது சிறந்தது. அப்போதுதான் நமது விருப்பப்படி பயணத்தை அமைத்துக் கொள்ளலாம். காரில் செல்ல இயலாதவர்கள், ரயிலில் செல்வது நல்லது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Tags: Babytravel

Recent Posts

பள்ளிகள் திறப்பு தேதியை அறிவித்த முதல் மாவட்டம்.! எங்கு தெரியுமா?

School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…

5 mins ago

DCvGT: கடைசிவரை போராடிய குஜராத்.. டெல்லி அபார வெற்றி..!

IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்  இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…

8 hours ago

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

9 hours ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

10 hours ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

11 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

11 hours ago