இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? சிஐஎஸ்எப் அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவு!

இந்தி தெரிந்தால் தான் இந்தியரா? சிஐஎஸ்எப் அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவு!

சிஐஎஸ்எப் அதிகாரியிடம் விசாரணை நடத்த உத்தரவு.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக மகளிரணி தலைவியுமான கனிமொழி, டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை பார்த்து,  அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை பெண் காவலர் ஒருவர் “நீங்கள் இந்தியனா?” என கேட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், கனிமொழி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், “நீங்கள் இந்தியனா?” என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அந்த சிஐஎஸ்எப் அதிகாரியிடம் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐஎஸ்எப் உத்தரவிட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube