இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் பற்றி பார்ப்போம்.
ஆரோக்கியமான உணவு என்பது நீங்கள் சாப்பிடுவது மட்டுமல்ல, எந்த உணவை சாப்பிடுகிறீர்கள், சரியான நேரத்திற்கு சாப்பிடுகிறீர்களா என்பதை பொருத்தது தான். அந்த வகையில்,நம்மில் பெரும்பாலானோர் உணவுகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுவதில்லை. நமது உடலின் மெட்டபாலிசம் காலையில் உச்சத்தில் இருப்பதால், நேரம் செல்ல, செல்ல பசி குறையும் என்பதால், காலை உணவுதான் அன்றைய முக்கிய உணவாகும்.
இரவு நேர்தத்தில் நாம் செய்யும் உணவுத் தேர்வுகள் நமது செரிமானம், தூக்கத்தின் தரம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே நமது இரவு உணவு என்பது மிகவும் முக்கியமானது. தற்போது இந்த பதிவில், இரவு நேரத்தில் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான உணவுகள் பற்றி பார்ப்போம்.
புரதம் நிறைந்த உணவுகள்

இரவு நேரத்தில் நாம் புரத சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது முக்கியம். இது நமது உடலுக்கு செரிமானத்தை ஊக்குவிப்பதோடு, இரவு முழுவதும் நீடித்த ஆற்றலையும் வழங்குகிறது. வறுக்கப்பட்ட அல்லது வேகவைத்த குறைந்த கொழுப்புள்ள கோழி, பருப்பு வகைகள், பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் நறுமணமுள்ள கறிவேப்பிலை ஆகியவற்றை உங்கள் இரவு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
காய்கறிகள்

பன்னீர், பருப்பு வகைகள், பீன்ஸ் போன்ற சுவையான உணவுகளை உங்கள் இரவு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த உணவுகள் வயிற்றில்லேசாக இருப்பதோடு, உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன மற்றும் நீங்கள் நன்றாக தூங்க உதவுகின்றன.
உப்பு

பொதுவாகவே உணவில் உப்பை மிதமான அளவில் சேர்ப்பது நல்லது. இரவு 7 மணிக்குப் பிறகு உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது முக்கியம், குறிப்பாக ஒரு இரவு கொண்டாட்டம் அல்லது ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, மாலை நேரங்களில் அதிகப்படியான உப்பை உட்கொள்வது உடலில் நீர் தேங்கி, இதயம் மற்றும் இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
தயிர்

இரவு நேரங்களில் தயிர் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. உங்கள் இரவு உணவோடு ஒரு கிண்ணம் தயிர் சாப்பிடுவது உங்களுக்குப் பழக்கமாக இருந்தால், அது மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆயுர்வேதத்தின் படி, தயிர் அதன் புளிப்பு மற்றும் இனிப்பு பண்புகளால் கப தோஷத்தை அதிகரிக்கிறது. இந்த ஏற்றத்தாழ்வு நாசிப் பாதைகளில் அதிகப்படியான சளி உற்பத்திக்கு வழிவகுக்கும்.
பொதுவாக இரவு நேரங்களில் எளிதில் செரிமானமாகக் கூடிய, காரம் குறைந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் அல்லது. அதே போல லேசான உணவுகளை சாப்பிடுவதும் மிகவும் நல்லது.