மாத்திரைகளை இரண்டாக உடைத்து உட்கொள்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

மாத்திரைகளை இரண்டாக உடைத்து உட்கொள்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு!

இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மாத்திரையை  இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? 

இன்று பெரும்பாலானோரின் வாழ்க்கையே மாத்திரைகளில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் உடல் உபாதைகளுக்காக நாம் மருத்துவமனைக்கு செல்லும்போது மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறோம். இந்நிலையில் இந்த மாத்திரைகள் சற்று பெரிதாக காணப்படும் போது அதை இரண்டாக உடைத்து அதை எடுத்துக் கொள்கிறோம். அவ்வாறு மாத்திரையை  இரண்டாக உடைத்து சாப்பிடுவது சரியா? தவறா? என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

மாத்திரைகளை இரண்டாக உடைத்து அதனை சாப்பிடுவது மிகவும் தவறான ஒரு செயல் ஆகும். முழுமையாக உட்கொள்வது தான் நமது உடலுக்கு நல்லது. ஏனென்றால், மாத்திரைகள் இரண்டாக உடைக்கும் போது சில சமயங்களில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய டோசேஜ் அளவு மாறுபடக்கூடும். இதனால் நமது உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. மருத்துவரிடம் மாத்திரைகளை இரண்டாக உடைக்கலாமா? என்று கேட்டு உறுதி செய்து கொள்வதும் நமக்கு நல்லது.

மாத்திரைகளை  உடைக்கும் போது அவற்றின் அளவு வேறுபடுகிறது. இவ்வாறு தவறான அளவில் உட்கொள்வதன் மூலம் நமது உடலில் மேலும் பல உபாதைகள் ஏற்பட நேரிடலாம்.  உயர் இரத்த அழுத்தம், கை கால் நடுக்கம், ஆர்த்ரைடிஸ், இதய நோயாளிகள் மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் ஒவ்வொரு மாத்திரையும் தயாரிக்கப்படும் போது அதில் சேர்க்கக்கூடிய மூலப் பொருட்களின் அளவு வேறுபட்டு காணப்படும்.

நாம் மாத்திரை இரண்டாக உடைக்கும் போது அவை சரியான அளவில் உடைபடும்  என்றும், அதில் இருக்கும் மூலப்பொருட்கள் சமமாக பிரிந்து இருக்கிறது என்றும் நாம் நினைக்க முடியாது. வீரியமிக்க மருந்துகள் வயிற்றில் பிரச்சினை ஏற்படுத்தாமல் இருக்க கோட்டிங் செய்யப்பட்டிருக்கும். எனவே இவ்வகை மாத்திரைகளை முழுமையாகச் சாப்பிட்டால்தான் அந்த மாத்திரையால் நமக்கு நன்மை கிடைக்கும்.

அவ்வாறு சாப்பிடும் போது நாம் எந்த நோய்க்காக இந்த மாத்திரை எடுத்துக் கொள்கிறோமோ, அந்த நோய்க்கான தீர்வு கிடைக்காது. அதேசமயம் பல பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு மாத்திரைகளை உடைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube