இஞ்சி டீ குடிப்பதால் இவ்வளவு தீமைகள் உள்ளதா!

இஞ்சி டீ குடிப்பதால் இவ்வளவு தீமைகள் உள்ளதா!

அதிக அளவு மருத்துவ குணம் இருக்கிறது எனவும் ஆயுர்வேதம் கலந்தது என்பதாலும் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இஞ்சி கலந்த டீ குடிப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் உள்ளது அவைகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள்.

இஞ்சி டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

அதிக அளவில் இஞ்சி டீ குடிப்பதால் நமது செரிமான அமைப்பு பாதிக்கப்படுவதுடன் வயிற்றுப்போக்கு ஒமட்டல் என பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உடலில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. அதிக அளவில் இஞ்சி டீ குடிப்பதால் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு சர்க்கரையை நோயை ஒட்டுமொத்தமாக குறைத்து அதனாலும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. மேலும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இஞ்சி டீ குடிப்பதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய படபடப்பை அதிகப்படுத்துகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பாக இஞ்சி டீ முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் மயக்கத்திற்கு கொடுக்கக்கூடிய மருந்துடன் இந்த இஞ்சி சாறு எதிர்வினை ஆற்றி அறுவை சிகிச்சை செய்த இடத்தில் புண் மற்றும் ரத்த கசிவு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

மேலும் நெஞ்செரிச்சல் உண்டாகும், தூக்கமின்மை ஏற்படும். பித்தப்பை கல் உள்ளவர்கள் இஞ்சி டீ குடிப்பதால் பித்த நீர் அதிகம் சுரந்து வலியை ஏற்படுத்தும். மேலும் இரைப்பை பிரச்சனை ஏற்படவும் காரணமாகிறது அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு உள்ள உமட்டல், வாந்தி ஆகிய சமயங்களில் இஞ்சி டீ குடிக்கும் பொழுது வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் குடிக்கும் கர்ப்பிணி பெண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அளவுக்கு மீறினால் எதுவுமே நஞ்சுதான். அதேசமயம் அளவு என்பதை விட சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த இஞ்சி டீயை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

author avatar
Rebekal
Join our channel google news Youtube