பப்பாளி பழத்திலும் இவ்வளவு நன்மைகள் உள்ளதா? அதிலுள்ள தீமைகளையும் அறிவோம்!

பழங்கள் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தான். அதுவும், சில குறிப்பிட்ட

By Rebekal | Published: Dec 20, 2019 11:39 AM

பழங்கள் என்றாலே எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஒன்று தான். அதுவும், சில குறிப்பிட்ட பழங்களை விரும்பி பழக்கம் நம்மில் யாருக்கு தான் இல்லை. ஆனால், நாம் உண்ணும் பழங்களின் நன்மைகள் மற்றும் தீமைகளை அறிந்து உண்பவர்கள் தான் குறைவு. தற்போதும் நாம் விரும்பி உண்ணும் பப்பாளி பழத்தின் நன்மை மற்றும் தீமைகளை பற்றி இங்கு காண்போம்.

பப்பாளியின் நன்மைகள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி அதிகரிக்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிட்டால் உடல் மற்றும் முகங்கள் பளபளப்பாக தோன்றும். இந்த பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். உடல் பருமனாக உள்ளவர்கள், உடலை குறைக்க விரும்பினால் பப்பாளி காயை கூட்டு போல செய்து சாப்பிட்டு வர உடல் எடை குறையும். குழந்தை பிறந்த பின்பு பால் சுரப்பு தாய்க்கு அதிகரிக்கவும் இந்த பப்பாளி காயை உணவில் சேர்க்கலாம். தேள் கொட்டிய இடத்தில பப்பாளி விதைகளை அரைத்து பூசினால் விஷங்கள் தாக்காது. உடலில் கட்டிகள் இருந்தால் பப்பாளி இலைகளை அரைத்து பூசும்போது, கட்டிகள் வீக்கம் வற்றி உடைந்துவிடும். இப்படி இலை, பழம், காய் மற்றும் விதை என அனைத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ள இந்த பழத்தில் சில தீமைகளும் உள்ளன.

பப்பாளியின் தீமைகள்:

அதிகம் பழுக்காத பப்பாளிப்பழத்தை ஆரம்பகால கர்ப்பிணிகள் சாப்பிடும் போது அதிலுள்ள பால் தன்மை குழந்தைக்கான கருவை கலைத்துவிடும். அதிகமான பப்பாளி பழங்களை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் குழந்தை பாக்கியம் வேண்டும் என விரும்புபவர்கள் சாப்பிடக்கூடாது. இரைப்பை மற்றும் குடல் பிரச்னைகள் உள்ளவர்கள் இந்த பலத்தை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. இந்த பழத்திலுள்ள பப்பைன் எனும் நொதிப்பொருள் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
Step2: Place in ads Display sections

unicc