கேரட்டை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அதிகமாக கேரட்டை பச்சையாக தான் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இவ்வாறு பச்சையாக சாப்பிடுவதால், நமது உடலில் உள்ள பல ஆரோக்கிய கேடுகள் குணமாகிறது. கேரட்டில் அதிக அளவிலான நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளது.

கொழுப்புகள் 

உடல் எடை அதிகரிக்க காரணமாக உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் கேரட் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது குடல் புண் சம்பந்தமான பிரச்சனைகளையும் நீக்குகிறது.

வயிற்றுவலி 

வயிற்று சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்களுக்கு கேரட் ஒரு சிறந்த மருந்தாயாகும். இந்த பிரச்னை உள்ளவர்கள் கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிற்று சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி விடும்.

செரிமானம் 

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் செரிமான பிரச்னை ஏற்படுவதுண்டு. இந்த பிரச்னை உள்ளவர்கள் கேரட்டை ஜூஸ் செய்து அருந்தினால் செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும் இது வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது.

கண்பார்வை 

கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கி விடும். மேலும், இது இரத்ததில் உள்ள கொழுப்பை கரைத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.