அட இவ்வளவு நன்மைகளா? இந்த இலை சாற்றை ஒரு வாரம் குடிச்சி பாருங்க!

முருங்கை இலை சாற்றில் உள்ள நன்மைகள்.

பொதுவாக நாம் முருங்கை இலையை சமைத்து தான் சாப்பிடுவது உண்டு. ஆனால், இந்த இலையில் உள்ள முழு பலனையும்  பெற்றுக் கொள்ள, இந்த இலையை சாறு எடுத்து குடிக்க வேண்டும். தற்போது இந்த சாற்றில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம்.

முருங்கை இலை சாறு தயாரிக்கும் முறை 

ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை மற்றும் சிறிய இஞ்சி துண்டு சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்க வேண்டும்.

உடல் எடை

இன்று உடல் எடையை குறைப்பதற்காக நாம் பல வழிகளை தேடி செல்கின்றோம். ஆனால், இந்த ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால், உடலில் உள்ள கேட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை  குறைக்க உதவுகிறது.

இரத்தம்

இந்த ஜூஸை அடிக்கடி குடிப்பதால், நமது இரத்தத்தை இது சுத்திகரிப்பதோடு, இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும், இது இரத்த அழுத்தம் ஏற்படாமலும் காக்கிறது.

நீரிழிவு

இன்று அதிகமானோர் நீரிழிவு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த சாற்றை தேன் கலக்காமல் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

பெண்களுக்கான பிரச்சனை

கர்ப்பப்பை பிரச்சனை உள்ள பெண்கள் இந்த ஜூஸை குடித்தால் இது கர்ப்பப்பையை வலுவாக்குவதுடன், குழந்தை பெற்ற  பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பையும் அதிகரிக்க செய்கிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.