அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா?
இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அசைவ உணவுகள் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. அசைவ உணவுகள் என்றால் மீன், முட்டை இறைச்சி போன்ற உணவுகளை தான் நாம் கூறுவதுண்டு. ஆனால் பலரும் நா அசைவ உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்றும் கூறுவதுண்டு. தற்போது இந்த பதிவில் அசைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? கெட்டதா? என்பது பற்றி பார்ப்போம்
பொதுவாக நமக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக எந்த ஒரு அசைவ உணவுகளையும் அதிகமாக சாப்பிட ஓடாது. அதாவது மீன் என்றால் மீன், சோறு என எல்லாவற்றையும் அதிகமாக சாப்பிட கூடாது. அப்படி சாப்பிடும் போது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மீன் சாப்பிட்டால், மீனை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். சோறு சிறிதளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு சாப்பிடுவதால் நமது உடலுக்கு நல்லது. அதுபோல இன்று பலரும் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவது வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் அதில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய எந்த ஒரு ஆற்றலும் கிடையாது. அது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. எனவே இப்படிப்பட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
அதுபோல மீனை எடுத்துக் கொண்டால், ஆற்று மீன் மற்றும் கடல் மீனை நன்கு சாப்பிடலாம். ஏனென்றால் இதில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஆற்றலுள்ளது. அதேசமயம் குளத்து மீன், ஏரி மீன்களை சாப்பிடுவதை விட்டு விடுங்கள் ஏனென்றால் அவற்றில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய ஆற்றல் தான் உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ளவர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் அதிக ஆயுளோடும் வாழ்கின்றனர். ஏனென்றால் இவர்கள் அதிகமாக சாப்பிடுவது மீன்கள். அதை விட மீன்களின் முட்டைகளை தான் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். இதில்தான் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல வகையான சத்துக்கள் உள்ளது.
ஆடு மற்றும் மாட்டு கறி சாப்பிடுபவர்கள் கறி சாப்பிடுவதை விட, அவற்றின் உடல் பகுதிகளை வாங்கி சமைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அதாவது, ஈரல், நல்லி எலும்பு, தொடை எலும்பு, கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை வாங்கி தனித்தனியாக சமைத்து சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கும். நாட்டுக் கோழி, காடை, காடை முட்டை, நாட்டுக்கோழி முட்டை ஆகியவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது. முக்கியமாக அசைவ உணவு சாப்பிடுபவர்கள் பிராய்லர் கோழிகளை சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.