புயலால் பாதிக்கபட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நியமனம்!

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வங்கக்கடலில் உருவான நிவர் மற்றும் புரவி புயல் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது, இந்நிலையில் நிவர் புயல் கரையை கடந்துள்ள போதும், தற்போது உருவான புரேவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடித்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, தமிழக அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள, முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் அமைச்சர்களை நியமனம் செய்துள்ளார். அதன்படி சென்னை மாவட்ட த்திற்கு ,அமைச்சர் ஜெயக்குமார் மா.பா.பாண்டியராஜன், கடலூர் மாவட்டத்திற்கு அமைச்சர் தங்கமணி, எம்.சி.சம்பத், திருவாரூர் மாவட்டத்திற்கு கே.பி.அன்பழகன், காமராஜ், நாகை மாவட்டத்திற்கு. எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.