எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு உத்தரவு…!ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி

நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது.

Image result for jayalalitha commission

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில்  நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக  நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், எம்ஜிஆரின் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு  உத்தரவு பிறப்பித்துள்ளது.எம்ஜிஆரை வெளிநாடு அழைத்துச் செல்ல எந்த அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது என ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது .அதேபோல் 1984 ஆம் ஆண்டு அப்போலோவில் இருந்து சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு எம்ஜிஆர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.அதேபோல் எம்ஜிஆருக்கு அளிக்கப்பட சிகிச்சை குறித்து 34 ஆண்டுகளுக்கு ஆவணங்களை கேட்டுள்ளது விசாரணை ஆணையம்.

மேலும் இதன் மூலம் எம்ஜிஆரை அழைத்துச்சென்றது  போல ஜெயலலிதாவை அழைத்து செல்ல எங்கு சிக்க ஏற்பட்டது என்று அறிய நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முடிவு செய்துள்ளது.