ஆன்டிபாடி மருந்து ஒரு டோஸ் ரூ.59,750 விற்பனை- இந்தியாவில் ரோச்சின் ஆன்டிபாடி காக்டெய்ல் அறிமுகம்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு புதிய ஆன்டிபாடி காக்டெய்ல் அறிமுகம் – ரோச் மற்றும் சிப்ளா நிறுவனத்தின் புதிய அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா காட்டுத்தீ போல் பரவிவரும் நிலையில், உயிரிழப்புகளும் உச்சத்தை  எட்டி வருகிறது, இதனை சரிசெய்யும் விதமாக இந்தியாவில் லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று சிகிச்சைக்காக ட்ரக் (போதைப் பொருள்) ஆன்டிபாடி காக்டெய்ல் மருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது திங்களன்று போதைப்பொருள் மருந்து விற்பனையில் முன்னனி நிறுவனமான ரோச் மற்றும் சிப்ளா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அதில் இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்க ட்ரக் ஆன்டிபாடி காக்டெய்ல் முதல் டோஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தானது லேசான மற்றும் மிதமான கொரோனா தொற்று சிகிச்சைக்கு உதவும் என்றும், மேலும் காக்டெய்ல் மருந்து  (Casirivimab and Imdevimab) ஒரு டோஸ் 59,750 ரூபாய்க்கு விற்கப்படும் என்று தெரிவித்துள்ளது, இதனையடுத்து கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக (மே 5) முதல் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரத்தை வழங்குவதாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.கோ) தெரிவித்துள்ளது, தற்போது இதன் முதல் டோஸ் இந்தியாவில் கிடைக்கும் என்றும் 2 வது டோஸ் ஜூன் மாதம் நடுப்பகுதியில் கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம் 2,00,000 நோயாளிகள் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.