தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்…அதிர்ச்சி அதிகாரிகள்

தமிழக முழுவதும் அரசு அலுவலங்களில் அதிரடி சோதனை..சிக்கிய ₹7லட்சம்…அதிர்ச்சி அதிகாரிகள்

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அரசுஅலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடி சோதனை ஈடுப்பட்டனர்.கணக்கில் வராத பல லட்ச ரூபாய் ஒரே நாளில் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு துறையினர் மதுரை விழுப்புரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை செய்ததில் ₹7லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி சோதனையானது மதுரை பழங்காநத்தம் இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கி கொண்டு பத்திரப்பதிவு நடப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

நெடு நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் பதிவாளர் பாலமுருகன் அறையில் கணக்கில் வராத ₹2லட்சத்து19 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை ஊழியர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 46 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல் விழுப்புரம் மாவட்டம் வானூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று அதிகமான புகார்கள் குவிந்ததால் அங்கும் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் ₹5ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.

இதனை அடுத்து மின்வாரிய நிர்வாகப்பொறியாளர் அலுவலகத்தில் ₹2லட்சம் ரூபாய் மற்றும் பள்ளிப்பாளையம் நகராட்சி அலுவலகம் நெல்லிக்குப்பம் சார்பதிவாளர் அலுவலகம் என அடுத்தடுத்த அதிரடி சோதனையில் ₹1லட்ச ரூபாய் சிக்கியது.

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் அதிரடி ரெய்டுகளால் கையூட்டு வாங்கும் அரசு அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

author avatar
kavitha
Join our channel google news Youtube