,

வேற லெவல் சம்பவம்…’பிச்சைக்காரன் 2′ படத்தின் டிரைலர் இதோ.!!

By

பிச்சைக்காரன் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

பிச்சைக்காரன் 2 

Pichaikkaran2TrailerFromToday
Pichaikkaran2TrailerFromToday [Image Source : Twitter/@vijayantony ]

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே நடிகராகவும் நடித்துள்ள திரைப்படம் பிச்சைக்காரன்-2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் அவருடன் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

டிரைலர் 

இந்த திரைப்படத்திற்கான டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சில காரணங்களால்  ட்ரைலர் தற்போது தாமதமாக வெளியிடபட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர்.

படத்தின் டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. டிரைலரை பார்த்த பலரும் அருமையாக இருப்பதாகவும், படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளதாகவும் , வேற லெவல் சம்பம் என கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மே 11 ரிலீஸ் 

Pichaikkaran2
Pichaikkaran2 [Image Source : Twitter/@vijayantony ]

பிச்சைக்காரன் 2 திரைப்படம்  படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தை வெளியிடுவதற்குத் தடை கோரி சென்னை உயர்நிதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனால் படம் வெளியாகாமல் இருந்தது. இதனையடுத்து ஒரு வழியாக திரைப்படம் வரும் மே மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.