இன்னொரு ஆசிட் முட்டை அடிச்சா தான் சரிப்பட்டு வருவ, பிகில் பட நடிகையை மிரட்டிய ரசிகர்.! 

பிகில் பட நடிகையான ரேபா ஜான் மீது ஆசிட் அடிப்பேன் என்று கூறிய ரசிகருக்கு

By ragi | Published: Jul 07, 2020 05:06 PM

பிகில் பட நடிகையான ரேபா ஜான் மீது ஆசிட் அடிப்பேன் என்று கூறிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளி வந்த திரைப்படம் பிகில். அட்லி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நயன்தாரா உட்பட பலர்  நடித்திருந்தனர்.இதில் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக இந்துஜா, வர்ஷா பொல்லம்மா, அமிர்தா ஐயர், ரேபா மோனிகா ஜான் உள்ளிட்ட பல நடிகைகள் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்த படத்தில் சிங்க பெண்ணாக நடித்த ரேபா ஜானின் மீது ஆசிட் அடித்த காட்சியால் அவர் பெருமளவில் பாராட்டுகளை பெற்றார். வழக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடும் இவரது ஒரு புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததை போன்ற கமெண்ட் செய்துள்ளார். அதாவது இன்னொரு ஆசிட் முட்டை அடிச்சா தான் நீ சரிப்பட்டு வருவா என்ற கமென்ட் அடித்த ரசிகருக்கு நோ கமென்ட்ஸ் என்றும் அவனை பிளாக் செய்து விட்டதாகவும் கூறி தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரேபா ஜான்.

Step2: Place in ads Display sections

unicc