ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு உயர்வு….!!

ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 20 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் குழுவில் இடம்பெற்றுள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ஜிஎஸ்டி தொகுப்பு சலுகைக்கான வரம்பு ஒரு கோடியே 50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் 1 முதல் இது அமலுக்கு வருவதாகவும் தெரிவித்தார். ஜிஎஸ்டி செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 20 லட்சத்தில் இருந்து 40 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும் என்றும், ஆண்டிற்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment