அரசு பள்ளிகளுக்கு சுமார் 5,000 ஆசிரியர்களை நியமிப்பதாக அறிவிப்பு..!

அரசு பள்ளிகளுக்கு சுமார் 5,000 ஆசிரியர்களை நியமிப்பதாக அறிவிப்பு..!

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளுக்கு சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிப்பதாக முதல்வர் பசவராஜா பொம்மை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

நேற்று தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் தின நிகழ்ச்சியில் பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதனால், நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளுக்கு சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிப்பதாக தெரிவித்தார்.

கல்வி அமைச்சரின் வேண்டுகோளின் பேரில், நடப்பு கல்வியாண்டில் சுமார் ஐயாயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. தேசியக் கல்வி கொள்கை இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிந்தைய கல்வித் துறையில் நடக்கும் சிறந்த விஷயங்களில் ஒன்று என்று பாராட்டினார்.

நான் கல்விக் கொள்கைகளைப் படித்தேன். சுதந்திரத்திற்கு பிந்தைய மாணவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடிய சிறந்த பரிசு இது. ஆசிரியர்கள் கொள்கையைப் படித்து அவர்களின் ஆலோசனையை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று பொம்மை கூறினார்.

author avatar
murugan
Join our channel google news Youtube