உடன் பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

உடன் பிறப்பே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயக்குனர் இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் உடன்பிறப்பே. இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது.

Udanpirappe

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார்.

Udanpirappe 3

இந்த திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியது என்றே கூறலாம், இந்த படம் அமேசான் பிரேமில் நேரடியாக வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் மற்றும் ஆர்வத்துடன் படத்திற்காக காத்துள்ளனர்.