H1B விசா தடைகளில் புதிய தளர்வுகள் அறிவிப்பு.. அமெரிக்க வெளியுறவுத்துறை

அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அமெரிக்கா “எச்1 பி” விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதன் பிறகும்  தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கொள்ளலாம்.

இந்த “எச்1 பி” விசாவை உலக நாடுகளில் அதிகமாக இந்தியர்களும்,  சீனர்களும் தான் பெற்று வருகின்றனர். ஆனால், டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்க மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் “எச்1 பி”விசாவில் பல கட்டுப்பாடுகளை விதித்தார்.

விதித்து ஜூன் 22-ம் தேதி கொரோனா காரணமாக பொருளாதாரம்  சரிந்துள்ளது.  அதனால், அமெரிக்கர்கள் வேலையை இழந்து உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என் கூறி அமெரிக்க அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு ஒப்பந்தம் பெறும் நிறுவனங்களில்  எச்1 பி விசா (அதாவது வெளிநாட்டினர்) வைத்திருப்பவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என கூறினார்.

மேலும், வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் H-1B விசாக்கள் தற்காலிகமாக  இந்த ஆண்டு இறுதி வரை தடை என்று டிரம்ப் கூறினார். இந்த சூழ்நிலையில் பணியாளர்களை மாற்றுவதற்கு முதலாளிகளை கட்டாயப்படுத்துவது நிதி நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்று ஆலோசகர் கூறினார்.

இந்நிலையில், H1B விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம். ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் H1B விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம்(அதாவது அமெரிக்காவில் உள்ள அதே நிறுவனத்தில், அதே வேலைக்கு திரும்பினால் H-1B விசா வழங்கப்படும்) என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan