தீபாவளிக்கு வெளியாகும் அண்ணாத்த – அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

ரஜினி நடித்து வரும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

வீரம், வேதாளம், விவேகம் போன்ற ஹிட் படங்களை இயக்கிய சிவா இயக்கத்தில்  ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

கொரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டது. பின்னர் டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது, படப்பிடிப்பில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது காரணமாக நிறுத்தப்பட்டது. மேலும், ரஜினிக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனது. தற்போது உடல்நிலை சீராகி சென்னையில் ஓய்வில் இருக்கிறார்.

தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியல் வரப்போவதில்லை என்றும் அறிவித்துவிட்டார் ரஜினி. இதனால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றும் எப்போது படம் வெளியாகும் எனவும் குழப்பம் நிலவி வந்த நிலையில், தற்போது அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி நவம்பர் 4 2021 அன்று வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்