அண்ணாத்த படம் பாதி படையப்பா பாதி பாட்ஷா போல இருக்கும் – திலீப் சுப்பராயன்..!! 

மாஸ்டர் திலீப் சுப்பராயன்  சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அண்ணாத்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார். 

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. மேலும் தற்போது படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிவரும் மாஸ்டர் திலீப் சுப்பராயன்  சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அண்ணாத்த திரைப்படம் குறித்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அண்ணாத்த திரைப்படம் மிகவும் அருமையாக இருக்கும். முதல் பகுதி படையப்பா போன்றும் இரண்டாவது பகுதி பாட்ஷா போன்று இருக்கும். இந்த படத்தில் ரஜினி சார் தான் ஸ்பெஷல். சண்டைக்காட்சியில் அவர் டூப் போடாமல் அவரே தான் நடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.