27 C
Chennai
Friday, October 22, 2021

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவிற்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை….!

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவிற்கு நன்றி தெரிவித்த அண்ணாமலை. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் மக்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களை திறக்க அனுமதிக்குமாறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து நாட்களும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்குமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது அனுமதி அளித்துள்ளதற்கு தமிழக முதல்வருக்கும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த பதிவில், ‘நவராத்திரி திருநாளில் பாஜகவின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் திருக்கோயில்களை திறக்க உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அறநிலை அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

spot_imgspot_img

Hot Topics

Read More