சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் ஐடி படித்தவர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடி தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பதவிக்கலாம் 6 மாதம் மட்டுமே. விண்ணப்பத்தை பதிவு செய்து 19.06.2023க்குள் பல்கலை கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
காலிப்பணிகள் :
- சாஃப்டவேர் அனலிஸிட்
- புரோகிராம் அனலிஸ்ட்
காலியிடங்கள் :
- சாஃப்டவேர் அனலிஸிட் -5.
- புரோகிராம் அனலிஸ்ட் -5.
கல்வித்தகுதி :
- சாஃப்டவேர் அனலிஸிட் – BE / BTech அல்லது MCA/ MTech (கணினி பிரிவு) மற்றும் குறிப்பிட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- புரோகிராம் அனலிஸ்ட் – BE / BTech மற்றும் குறிப்பிட்ட கண்ணி தொழில்நுட்பம் தெரிந்து இருக்க வேண்டும் (Oracle, MySQL, Data Base Administration, Java Programming)
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
- சாஃப்டவேர் அனலிஸிட் – ரூ.30,000/-
- புரோகிராம் அனலிஸ்ட் – ரூ.25,000/-
வயது வரம்பு – குறிப்பிடப்படவில்லை.
தேர்வு செய்யப்படும் முறை :
- விண்ணப்பங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 19 ஜூன் 2023 (மாலை 5 மணிக்குள் தபால் வந்து சேர வேண்டும்)
விண்ணப்பிக்கும் முறை :
- அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தளமான auegov.ac.in க்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் வெளியிப்படட்ட உரிய வேலைவாய்ப்பு லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் விண்ணப்பத்தை பத்திரவிறக்கம் செய்து அதனை நிரப்பி, அதில் தேவைப்படும் ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவருக்கு Application for Temporary Post என எழுதி அனுப்ப வேண்டும்.
The Director,
Centre for e-Governance,
Centre for Excellence Building,
Anna University,
Chennai – 600 025