ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

ஆன்லைன் செமஸ்டர் தேர்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகல்ள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அந்தவகையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அதற்கான வழில்காடு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 60 மதிப்பெண்களுக்கான தேர்வுகள் ஒரு மணிநேரம் ஆன்லைன் வாயிலாக நடைபெறும் எனவும், மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்க இயலாமல் போனால், நேரடியாக எழுத்துத் தேர்வு நடத்தப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.

மேலும் லேப்டாப், ஸ்மார்ட் போன், டேப்லெட், கணினியில் தேர்வினை எழுதலாம் எனவும், 60 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் தேர்வு, 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும் என, தேர்வு எழுதும் போது மாணவர்கள் தங்களுடன் வேறு யாரையும் அமர வைக்கக் கூடாது என்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube