திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து – ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வழங்கி வந்த விஐபி தரிசனம் முறை ரத்து செய்யப்படுவதாக ஆந்திர உயர் நீதிமன்றம்  தேவஸ்தானம் போர்ட்க்கு உத்தரவிட்டுள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலை பெருமாள் கோவில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பிரமுகர்கள் , முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க வி ஐ பி தரிசனம் என்ற பெயரில் 500 ரூபாய் கட்டணத்தில் L1, L2, L3 என்ற முறையில் டிக்கெட்கள் வழங்கப்படுகிறது. ஒரே கட்டணத்தில் 3 தரிசனங்களை எதிர்த்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, திருப்பதி தேவஸ்தானம் அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி க்கு 3 வகையில் வழங்கும் சிறப்பு தரிசன முறையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.