இசைத்துறையின் சாதனையாளர் SPB-க்கு ஆந்திர அரசு செய்யும் கௌரவம்.!

இசைத்துறையின் மிகப் பெரும் சாதனையாளரான மறைந்த எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக அரசு இசைப்பள்ளிக்கு அவரது பெயரை வைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா நோய் தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் என பலரும் சோகக்கடலில் ஆழ்த்தியது .

அவரது இழப்பு திரையுலகிற்கே மிகப் பெரும் இழப்பு தான் . அதனையடுத்து இசைத்துறையின் சாதனையாளரும் ,பல படங்களுக்கு டப்பிங் செய்த டப்பிங் கலைஞருமான எஸ்பிபி அவர்களின் நினைவாக டப்பிங் ஸ்டுடியோ ஒன்று தொடங்க முடிவு செய்துள்ளதாக டப்பிங் யூனியனின் தலைவரான‌ ராதாரவி அறிவித்திருந்தார் .

இந்த நிலையில் தற்போது மறைந்த எஸ்பிபி அவர்களை கௌரவிக்கும் விதமாக அரசு இசைப்பள்ளிக்கு அவரது பெயரை வைக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.அதாவது நெல்லூரில் உள்ள அரசு இசை பள்ளியை “டாக்டர்.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நடனப்பள்ளி” என பெயர் மாற்றம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.