பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு !

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆவடி உட்பட நாட்டின் 5 ராணுவ சீருடை தொழிற்சாலைகளை மூடக்கூடாது என்று கூறியுள்ளார்.
சீருடைகளுக்கு பதில் சீருடைப்படி வழங்கும் 7-வது ஊதியக் குழு பரிந்துரையை அடுத்து இந்த தொழிற்சாலைகள் ஏப்ரலுடன் மூடப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஆவடியில் 2 ஆயிரத்து 321 பேர் உட்பட 12 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
ராணுவ சீருடைகளின் சிறப்பே மிடுக்கு என்று தெரிவித்துள்ள அவர், ஒரே மாதிரி சீருடையில் பயிற்சி மற்றும் அணி வகுப்புக்கு தனி மரியாதை உண்டு என்று குறிப்பிட்டுள்ளார். சீருடைகள் வழிகாட்டு விதிமுறைகளுடன் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியம் என்று தெரிவித்துள்ள அவர், தனித்தனி இடங்களில் தயாரித்து விற்கப்பட்டால், ஒரே மாதிரியாக வடிவமைக்கப்படாது என்பதோடு மிடுக்கு குலைந்து விடும் என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment