அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது - மியாட் மருத்துவமனை

அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது

By venu | Published: Jul 11, 2020 05:30 PM

அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது அரசு.உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.ஆனால் இதற்கு அமைச்சர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது.  

 இதனிடையே  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது என்று  மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.இந்நிலையில் மியாட் மருத்துவமனை நிர்வாகம் ,அமைச்சர் அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளது.விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று  தெரிவித்துள்ளது. ஏற்கனவே அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Step2: Place in ads Display sections

unicc