அனந்த்நாக்கில் தேடுதல் வேட்டை.! 2 தீவிரவாதிகள் சுட்டு கொலை.!

அனந்த்நாக்கில் நடைபெற்ற  மோதலில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு

By murugan | Published: Jul 13, 2020 01:28 PM

அனந்த்நாக்கில் நடைபெற்ற  மோதலில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்தததாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ஸ்ரிகுஃப்வாரா என்ற  பகுதியில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான இரண்டு தீவிரவாதிகளை  படையினர் சுட்டு கொலை செய்தததாக  காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து இரண்டு ஏ.கே .47  தூப்பாக்கியை மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

ஸ்ரிகுஃப்வாராவில் இரண்டு தீவிரவாதிகள் இருப்பதைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து மற்றும் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக  காவல்துறை அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

நேற்று பாண்டிபோரா போலீசார் சந்தர்கீர் மற்றும் சாதுனாரா பகுதிகளில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரை  கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 
Step2: Place in ads Display sections

unicc