25 பள்ளிகள்.! 13 மாத வேலை.! 1 கோடி ரூபாய் சம்பளம்! சிக்கிய பலே ஆசிரியை.!

உத்திர பிரதேசத்தில் உள்ள மைன்பூரை சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. இவர்  தொடர்ந்து 13 மாதங்களாக 25 பள்ளிகளில் வேலை பார்த்து அதற்கு சம்பளமாக 1 கோடி ரூபாய் சம்பளமாக  பெற்றுள்ளது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதமே இந்த மோசடி வேலை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. அறிவியல் டீச்சரான அனாமிகா சுக்லா பிப்ரவரிக்கு முன்னர் 13 மாதங்களாக 25 பள்ளிகளில் வேலைபார்த்து சம்பளம் பெற்றுள்ளார்.

இந்த விஷயமானது, கல்வி அதிகாரிகள் மாணவ் சம்படா அரசு இணைய பக்கத்தில் ஆசிரியர்களின் குறிப்பை பதிவேற்றும் போது, அனாமிகா சுக்லா ஆசிரியையின் தனி விபரங்கள் 25 பள்ளிகளில் வேலைபார்ப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் அதிகாரிகளையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அனைத்து பள்ளிகளின் வருகை பதிவேடு, மற்ற விவரங்களில் இருந்து எப்படி அனாமிகா தப்பினார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முழு விசாரணை நடைபெற்றுவருவதாகவும், தற்போது ஊரடங்கு காலத்தால் தள்ளிவைக்கப்பட்ட விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.