அனல் காற்று படிப்படியாக குறையும் இந்திய வானிலை மையம்.!

நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்யும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது, பல இடங்களில் அனல் காற்று வீசுகிறது. பல மாநிலங்களில் ரெட் அலார்ட் கொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ராஜஸ்தான்,மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நாளை மறுநாள் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்ய ஆரம்பிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இருந்து பலத்த காற்று வீசுவதால் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் மீனவர்கள் வட மேற்கு வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தென் மேற்கே அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.