நடுரோட்டில் அனாதையாக கிடந்த ரூ.9,600, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை

36
  • நடுரோட்டில், அனாதையாக ரூ.9,600 கிடந்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் குறித்த பல விதிமுறைகளை விதித்துள்ளார்.

இந்நிலையில், திருச்சி, துறையில் முதல்வர் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற கட்சி தொண்டர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் பறக்கும்படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அந்த பகுதிக்கு தேர்தல் பறக்கும் படையினர் விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்து சந்தேகப்படுபடியாக சிலர் அந்த இடத்தில இருந்து ஓடி உள்ளனர். அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த இடத்தில் அனாதையாக ரூ.9,600 கிடந்ததை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்நிலையில், இந்த பணம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டுவரப்பட்ட பணமா என்பது குறித்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.