நெல்லையில் ஒரு அதிசய கிணறு..! ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்..!

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அத்தியா கிணற்றை ஆச்சரியத்துடன்  பார்த்து செல்லும் பொதுமக்கள்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

அந்த வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால் அதன் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இந்த தண்ணீர் அப்பகுதியில் உள்ள இரண்டு கிணறுகளுக்குள்  பாய்கிறது.

இந்தக் கிணற்றிற்கு பல மாதங்களுக்கு தண்ணீர் தொடர்ந்து சென்றாலும் இதுவரை நிரம்பியது இல்லை என்று கூறுகின்றனர். இந்த கிணற்றுக்குள் தண்ணீர் செல்வதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் என கூறப்படும் நிலையில், எவ்வளவு தண்ணீர் சென்றால் நிரம்பாத இந்த கிணற்றை, அப்பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.