#Breaking: தொடரும் குற்றங்கள்.! மற்றொரு பிரபல பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார்..!

#Breaking: தொடரும் குற்றங்கள்.! மற்றொரு பிரபல பள்ளி நிறுவனர் மீது பாலியல் புகார்..!

சென்னையை அடுத்த புதுப்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது முன்னாள் மாணவி ஒருவர் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து,தமிழ்நாடு பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி என்ற பெயரில் விளையாட்டு பயிற்சி மையம் நடத்தி வரும் தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து,ஜூன் 11-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து,PSBB மில்லினியம் பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெபிராஜ் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்ட நிலையில்,நீதிபதி மகாராஜன் வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை கெபிரஜை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில்,சென்னையை அடுத்த புதுப்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவி,சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

மாணவி சமூக வலைதளத்தில் கூறியதாவது:

“பத்தாம் வகுப்பு முடிக்கும் தருவாயில் இருந்த பொழுது,பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா என்னை அழைத்து என்னுடைய ஆடைகளை கழட்ட முயன்றார். நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.மேலும் நான் அவரிடம்  இதை என்னால் செய்ய முடியாது என்று கூறினேன்.ஆனால்,அவர் தன்னை “இறைவன் கிருஷ்ணா” என்று கூறி பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தினார்.

ஆனால்,அதை ஒருபொழுதும் என்னால் செய்ய முடியவில்லை,அதனால் அவர் மிகவும் கோபமடைந்தார்.அதுமட்டுமில்லாமல் குழு உடலுறவுக்கு அவர் எப்போதும் என்னை அழைப்பார் நான் ஒருபோதும் அதற்கு செல்ல விரும்ப மாட்டேன்.ஆனால் ஒருமுறை உள்ளே என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக நான் சென்றேன் அப்போது அவர் சிறுமிகளுக்கு விலை உயர்ந்த மதுபானங்களை கொடுத்து குழுவாக உடலுறவு செய்தார்.மேலும் அன்பு, கடவுள் என்கின்ற பெயரில் மாணவிகளை உடலுறவு வைத்துக் கொள்வதற்கு அவர் தூண்டுவார்”,எனப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணைய தலைவர் சரஸ்வதி ரெங்கசாமி தலைமையிலான குழுவினர்,சுசில் ஹரி பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

Join our channel google news Youtube