அகமதாபாத்தின் ஒரு நாள் கலெக்டராகிய 11 வயது சிறுமி – காரணம் இது தான்!

அகமதாபாத்தின் ஒரு நாள் கலெக்டராகிய 11 வயது சிறுமி – காரணம் இது தான்!

மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த சிறுமி அவரது விருப்பம் போல ஒரு நாள் கலெக்டராக இருந்துள்ளார்.  

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் புளோரா. கடந்த 7 மாதங்களாக மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்த சிறுமி நன்றாக படிக்கக்கூடிய சிறுமி என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சிறுமிக்கு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசை இருந்ததாக சிறுமி குறித்து மேக் எ விஷ் பவுண்டேஷன் அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கலெக்டரின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் அகமதாபாத் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி புளோரா, ஒரு நாள் முழுவதும் கலெக்டரின் நாற்காலியில் அமர்ந்து ஒரு நாள் கலெக்டராக அவரது விருப்பப்படி இருந்துள்ளார்.

இது குறித்து அகமதாபாத் கலெக்டர் கூறுகையில், சிறுமி புளோரா கலெக்டராக வேண்டும் என்பது அவரது விருப்பம் எனவும், அவரது விருப்பத்தை நிறைவேற்றி தருமாறு மேக் எ விஷ் அறக்கட்டளை தனக்கு தெரிவித்திருந்தது, அவர்களது கோரிக்கையை ஏற்று நான் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube