அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் கடிதம்.
தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம், பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், நாட்டில் பால் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் அமுல் நிறுவன நடவடிக்கை, நுகர்வோர் மத்தியில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும். கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (அமுல் நிறுவனம்) இதுநாள்வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்தனர்.
தற்போது தமிழ்நாட்டில், பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, மாண்புமிகு ஒன்றிய உள் துறை அமைச்சர் அவர்கள் உடனடியாகத் தலையிட்டு, இப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழ்நாட்டில், ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்திட வலியுறுத்தி, மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு.@AmitShah அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் கடிதம்#CMMKSTALIN #TNDIPR@CMOTamilnadu pic.twitter.com/7MkseL5aeK
— TN DIPR (@TNDIPRNEWS) May 25, 2023