மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப் பச்சன் மகன்.!

அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாகவும்,

By ragi | Published: Aug 02, 2020 06:22 PM

அமிதாப் பச்சன் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியதாகவும், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11ம் தேதி பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் . அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. அது மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அமிதாப் பச்சனுக்கு இன்று கொரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொண்டதில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், தான் சிகிச்சை பெற்று வருவதாகவும் அபிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். அதில் எனது தந்தைக்கு சமீபத்திய கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்ததை அடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், அவர் இனி முதல் வீட்டில் இருந்து ஓய்வெடுத்து கொள்வார் என்றும், உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்த ட்வீட்டில் தனக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், எனவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மீண்டும் எங்கள் குடும்பத்தினர் மீது நீங்கள் காண்பிக்கும் தொடர்ச்சியான பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி. விரைவில் கொரோனாவை வென்று ஆரோக்கியமாக வருவேன் என்று பதிவிட்டுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc