சானிடைசரால் சுத்திகரிக்கப்பட்ட அமிதாப் மற்றும் அபிஷேக் பச்சனின் பங்களாக்கள்.! நோய்க் கட்டுபாட்டு பகுதியாக அறிவிப்பு.!

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை

By ragi | Published: Jul 13, 2020 03:15 PM

அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது பங்களாக்களை சானிடைசரால் சுத்தம் செய்து, நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளது.

பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பல பிரபலங்களும், ரசிகர்களும் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நலன் விசாரித்தும், அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.

நானாவதி மருத்துவமனையின் டாக்டர் அப்துல் சமத் அன்சாரி கூறுகையில், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வசதியாக இருப்பதாகவும், நன்றாக உணர்வதாகவும், இருவரும் நன்றாக தூங்கி, காலை உணவை சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பிரஹன் மும்பை மாநகராட்சியில்(பி. எம். சி) உள்ள அதிகாரிகள் சிலர் மும்பையில் உள்ள பச்சனின் பங்களாக்களான ஜனக், ஜல்சா மற்றும் பிரதிக்ஷா ஆகியவற்றை சானிடைசரை கொண்டு சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் பங்களா இருக்கும் பகுதியை நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து பேனர் ஒட்டப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc