பாஜக மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் தொடங்கியது .

அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் அமித்ஷா இன்று  ஆலோசனை நடத்துகிறார்.டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு  விடுக்கப்பட்டது.பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் தொடங்கியது.ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா பங்கேற்றுள்ளனர்.