“கர்நாடகத்தை அடுத்து கேரளம்” இருக்கிறது என எச்சரிக்கும் அமித்ஷா அவர்களே! – சு.வெங்கடேசன் எம்.பி

“கர்நாடகத்தை அடுத்து கேரளம்” இருக்கிறது என எச்சரிக்கும் அமித்ஷா அவர்களே! – சு.வெங்கடேசன் எம்.பி

su.venkadesan

அற்ப அரசியலுக்கு எதிரான போரில்  கேரளத்துடன் தமிழகம் இணைந்து நிற்கும் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

மோடி தலைமையிலான பா.ஜ.க.தான் கர்நாடகாவை பாதுகாக்க முடியும்; பக்கத்தில் கேரளா இருக்கிறது; அதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மங்களூர் பேரணியில் பேசியுள்ளார். இதனையடுத்து சி பி எம் மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் அமித்ஷாவின் உரைகுறித்து கட்டுரை எழுதியுள்ளார்.

இந்த நிலையில், ஜான் பிரிட்டாஸின் கூற்று தேச துரோகமானது என கேரள பாஜக செயலாளர் பி.சுதிர் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனையடுத்து, ஜான் பிரிட்டாஸ் அவர்களுக்கு “சம்மன்” அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமித்ஷாவுக்கு பதிலளித்த ஜான் பிரிட்டாஸ் எம் பிக்கு சம்மன் – விசாரனை. “கர்நாடகத்தை அடுத்து கேரளம்” இருக்கிறது என எச்சரிக்கும் அமித்ஷா அவர்களே! மாநிலங்களின் சகோதரத்துவத்தை வாக்குவங்கிக்காக பலிகொடுத்தும் அற்ப அரசியலுக்கு எதிரான போரில்  கேரளத்துடன் தமிழகம் இணைந்து நிற்கும். ஜனநாயகத்தை நேசிக்கிற ஒவ்வொருவரும் ஜான்பிரிட்டாஸுடன் இணைந்து நிற்போம்.’ என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube