திருக்கோவிலூருக்கு அமித்ஷா நாளை வருகை..!

திருக்கோவிலூருக்கு நாளை மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தேர்தல் பரப்புரையாற்ற வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தங்கள் போட்டியிடம் தொகுதியில் தீவிரமாக  பிரச்சாரம் நடத்தி வருகிறார்கள். மேலும், இவர்களுக்கு ஆதரவாக கட்சி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரபலங்கள் பிரசாரம் செய்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, பாஜக மற்றும் கூட்டணி கட்சியை ஆதரித்து பாஜக சார்பில்  பிரதமர் மோடி, ஜே.பி நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சர்கள் பலர் ஆகியோர் தமிழகம் வருகிறார்கள்.

இந்நிலையில், திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வி.ஏ.டி.கலிவரதனை ஆதரித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம்  மேற்கொள்ள நாளை வருகிறார். புதுச்சேரியில் இருந்து நாளை காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் வரும் பொதுக்கூட்ட மேடைக்கு காரில் செல்கிறார்.

author avatar
murugan