புரெவி புயல் தொடர்பாக இரு முதலமைச்சரிடம் கேட்டறிந்த அமித்ஷா..!

புரெவி புயலை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு மற்றும் கேரள முதல்வர்களுடன் பேசினார், அப்போது தமிழ்நாடு மற்றும் கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்யும் என கூறினார். தேசிய பேரிடர் பதில் படை ஏற்கனவே இரு மாநிலங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புரெவி புயல் இன்று இரவு அல்லது நாளை காலை  பம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கவுள்ளதாகவும், அப்போது 70-80 கிமீ அல்லது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று  தெரிவித்துள்ளது. புரெவி புயலைக் கருத்தில் கொண்டு மாநிலம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan