கொரோனாவிற்கு பலியான இந்தியாவை சேர்ந்த அமெரிக்க வாழ் பத்திரிக்கையாளர்.! இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி.!

கொரோனாவிற்கு பலியான இந்தியாவை சேர்ந்த அமெரிக்க வாழ் பத்திரிக்கையாளர்.! இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி.!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பலவேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்த வைரஸ் தாக்குதல் வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது. 

இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு, அமெரிக்க வாழ் இந்தியரான பிரேம் காஞ்சிபோட்லோ கடந்த திங்கள் கிழமை முயிரிழந்தார். 66 வயதாகும் இவர் அமெரிக்காவில் 1992 முதல் அமெரிக்காவில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த மார்ச் 28இல் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த திங்களன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இவரது இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா நல்லுறவுக்கு சிறப்பாக பங்காற்றியவர் என பதிவிட்டு, அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube